"சிஸ்டம் ஒழுங்காக இல்லை"... எஸ்.பி திடீர் ராஜினாமா..!

தமிழ்நாட்டில் பல பட்டாலியன்கள் இருந்தாலும் மணிமுத்தாறு பட்டாலியன் என்பது சிறப்பு வாய்ந்த பட்டாலியனாக காவலர்களுக்கு பயிற்சி வழங்குவதில் முன்னிலையில் இருக்கிறது. பல சினிமா திரைப்படங்களில் கூட மணிமுத்தாறு பட்டாலியனை திறமையாக பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் 12 ஆவது பட்டாலியன் கமாண்டன்ட் அருண் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தது தமிழ்நாடு காவல் துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தமிழ்நாடு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த அருண் கடந்த 2024 ஆம் ஆண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று பட்டாலியன் ஒன்பதுக்கு கமாண்டன்ட் ஆக பணியமர்த்தப்பட்டார்.
கடந்த 10 மாதமாக அவர் இங்கு பணிபுரிந்து வந்த நிலையில் 3 மாதங்களுக்கு முன்பு தனது பணியை ராஜினாமா செய்ய போவதாக தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு நேரில் கடிதம் வழங்கியுள்ளார். அதன்படி தொடர்ந்து 3 மாதங்கள் நோட்டீஸ் காலத்தில் பணிபுரிந்து விட்டு கடந்த 13ம் தேதி முழுவதுமாக பணியில் இருந்து விலகி கொண்டார். எஸ்பி அந்தஸ்தில் இருந்த காவல்துறை அதிகாரி திடீரென பணியை ராஜினாமா செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
''கமாண்டண்ட் என்ற முறையில் எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. உட்கட்டமைப்பு வசதிகள் சரியில்லை உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக மன அழுத்தத்தில் இருந்தேன். இங்கு சிஸ்டம் ஒழுங்காக இல்லை. சொல்வதற்கு பல காரணம் இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக சொல்ல முடியாது எனஅருண் கூறினார்.