இன்று தாக்க இருக்கும் சூரியனின் காந்தப்புயல்..! செயற்கைகோள் பாதிக்கப்படுமா ?
2010ம் ஆண்டு முதல் சூரியனை, நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி (Solar Dynamics Observatory) என்ற செயற்கைகோள் கண்காணித்து வருகிறது. இந்த செயற்கைகோள் தான் ஒரு மிகப்பெரிய சூரிய வெடிப்பை படம் பிடித்து பூமிக்கு அனுப்பி உள்ளது. இந்த வெடிப்பை, ஆராய்சியாளர்கள் X9.1 வகையை சார்ந்தது என்கிறார்கள்.
அக்டோபர் 1ம் தேதி, AR3842 என்ற சூரியப் புள்ளியிலிருந்து X7.1 அளவு கொண்ட சக்திவாய்ந்த ஒரு வெடிப்புத் தோன்றியது. அதை விஞ்ஞானிகள் கண்காணித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் அதே சூரிய புள்ளியிலிருந்து மீண்டும் X9.05 அளவுக்கொண்ட அதிக சக்தி வாய்ந்த வெடிப்பு ஒன்று தோன்றியுள்ளது. இந்த வெடிப்பினால் ஏற்பட்ட கதிர்வீச்சு ஆப்பிரிக்க நாடுகளில், ரேடியோ அலைகளில் அரை மணி நேரம் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஹேம் ரேடியோ ஆப்ரேட்டர்கள் 30 நிமிடம் சிக்னல் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். அதேபோன்று இன்றும் (அக்.,05) சூரிய வெடிப்பினால் உண்டாகும் கதிர் வீச்சு, பூமியை தாக்கக்கூடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதன் மூலம் செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, விண்வெளியாக கிரிட்டுகளும் பாதிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.