1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை..!

Q

வடகிழக்கு பருவமழை கடந்த வாரத்தோடு முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இரவு மற்றும் அதிகாலையில் கடுமையான பனி பொழிவு நிலவுகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த 4 நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. 

இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 

6ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதேபோல் 7 முதல் 10ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Trending News

Latest News

You May Like