100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வாட்டி வதைத்த வெயில் !!
தமிழகத்தில் அக்னி நட்சத்திர காலத்தில் சென்னையில் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டை தொட்ட வெப்பம் , அதன் பின்பு இன்று மீண்டும் வெயில் அதிகரித்து 104 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியிருக்கிறது.
கடந்த சில நாள்களாகத் தமிழகத்தில் வெப்பம் தணிந்திருந்த நிலையில் இன்று 10 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. தமிழகத்தில் கடந்த 28 - ம் தேதியுடன் கத்திரி வெயில் முடிவடைந்தது.
ஆனால் அதைத் தொடர்ந்தும் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கிடையே சில மாவட்டங்களில் அவ்வப் போது மழை பொழிவும் இருந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழையைத் தொடங்கியுள்ளதால் அம்மாநிலத்தையொட்டி பகுதிகளில் வெயில் குறைந்து , மழைபொழிவு தொடங்கவுள்ளது.
இருப்பினும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதன்படி திருத்தணி 105.08,
சென்னை மீனம்பாக்கம் 104.1, மதுரை விமான நிலையம் மற்றும் நாகை 104, சென்னை நுங்கம்பாக்கம் 103.4, கடலூர் 102.9, தூத்துக்குடி 102.3, வேலூர் 101.4, திருச்சி 101.8, புதுவை 100.7 ஆகிய இடங்களில் டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவாகி இருக்கிறது.
Newstm.in