இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பிரபல வீரர் திடீர் மறைவு.. ரசிகர்கள் அதிர்ச்சி !!

 | 

இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்றுக்கொடுத்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் காலமானார்.

இந்தியாவின் மிகச் சிறந்த குத்துச்சண்டை வீரர்களில் ஒருவராகப் போற்றப்படுபவர் டிங்கோ சிங். 1998 ஆம் ஆண்டு பேங்காக் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். டிங்கோ சிங்குக்கு அர்ஜுனா விருதையும், பதம்ஸ்ரீ விருதையும் இந்திய அரசாங்கம் வழங்கி கவுரவித்தது.

இந்தநிலையில் அவருக்கு கடந்த 2018ஆம்ஆண்டு முதல் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்றுவந்தார். அவதிப்பட்டு வந்த டிங்கோ சிங், நேற்றுமுன்தினம் காலமானார். அவருக்கு வயது 42. கடந்த வருடம் மே மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் விரைவில் அதிலிருந்து டிங்கோ சிங் மீண்டார். கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக கடந்த வருடம் இம்பாலிலிருந்து விமானம் மூலமாக டெல்லிக்கு வந்து சென்றுவந்த நிலையில் தற்போது திடீரென காலமானார்.

இவரது மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருக்கும் பிரதமர் மோடி, டிங்கோ சிங் விளையாட்டுலகின் சூப்பர் ஸ்டார். மிகச்சிறந்த குத்துச்சண்டை வீரர். பல விருதுகளைப் பெற்று, அந்தப் போட்டியை பிரபலப்படுத்த முக்கியப் பங்காற்றியவர். அவரது மறைவுக்கு வருந்துகிறேன். அவர் குடும்பத்துக்கும், அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் என் இரங்கல்கள். ஓம் சாந்தி" என்று பகிர்ந்துள்ளார்.

இந்திய விளையாட்டு ஆணையம், ஆறு முறை உலக சாம்பியனான மேரி கோம், விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் எனப் பலரும் டிங்கோ சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP