மாணவர்கள் ஷாக்..! இனி பள்ளிகளுக்கு சனிக்கிழமை லீவு கேன்சல்!

தீபாவளி பண்டிகையையொட்டி சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக நேற்றைய தினமும் இன்று அதிகாலையும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் சனிக்கிழமை வேலை நாள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதால், விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளில் பள்ளி இயங்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மழைக் கால விடுமுறையை ஈடுகட்ட பள்ளிக் கல்வித் துறை இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
அதே வேளையில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படுவது குறித்து அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.