1. Home
  2. தமிழ்நாடு

அலறிய மாணவர்கள்..! குஜராத்தில் தனியார் பள்ளியில் வகுப்பறை இடிந்து விழும் அதிர்ச்சி காட்சிகள்..!

1

குஜராத்தில் உள்ள வதோதராவில் இயங்கி வரும் ஸ்ரீ நாராயண் குருகுல் பள்ளியின் முதல் தளத்தில் இருந்த 7 வகுப்பு மாணவர்கள் அமர்ந்திருந்த வகுப்பறையின் பக்கவாட்டுச் சுவர் நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் உணவு இடைவேளையின்போது திடீரென இடிந்து விழுந்தது.

வகுப்பறையில் இருந்த மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு தலைமையாசிரியர் உட்பட அனைவரும் அங்கு ஓடி வந்து மாணவ்ர்களை அங்கிருந்து மீட்டனர்.இந்த விபத்தில் ஒரு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

வகுப்பில் சுவர் இடிந்தபோது சுவரின் அருகே இருந்த மாணவனும் கீழே விழும் காட்சிகள் வெளியாகி காண்போரை அதிரச் செய்து வருகிறது.


 

Trending News

Latest News

You May Like