புருஷன் கட்டுண தாலிய கழட்டி கொடுத்துட்டு போய் நீட் தேர்வு எழுதிய மாணவி!! வைரலாகும் புகைப்படங்கள்..

இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்காக தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு நீட். இந்த தேர்வுக்கு செல்லும் மாணவ,மாணவிகளிகளுக்கு பல்வேறு உடை கட்டுப்பாடுகள் உள்ளன.
அதன்படி முழுக்கை சட்டை, டி சர்ட், கைக் கடிகாரம், குளிர் கண்ணாடி, செயின், மோதிரம், பிரேஸ்லெட், ஷூ ஆகியவற்றை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் புடவை, வலையல்கள், தொப்பி, பர்தா, பைஜாமா, குர்தா ஆகியவை அணிய தடை உள்ளது.ஆனால், அரைக்கை சட்டை, கால்சட்டை (பேன்ட்), ஜீன்ஸ் கால்சட்டை, செருப்பு,மருத்துவர்கள் பரிந்துரைத்த கண் கண்ணாடி, சுடிதார், சிறிய அளவு ரப்பர் பேன்ட்,லெக்கின்ஸ் ஆகியவற்றுக்கு மட்டுமே தேர்வுக்கூடத்துக்குள் அனுமதி உண்டு.
திருமணமான பெண்கள் தாலி மற்றும் வளையல் கூட அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் நெல்லையில் திருமணமாகி நான்கு மாதங்களே ஆன பெண், தாலி மற்றும் மெட்டியை கழற்றி கொடுத்துவிட்டு நீட் தேர்வு எழுத சென்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
தமிழகத்தில் தாலிக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும், பெண்கள் அதனைப் போற்றி பூஜிப்பது போன்ற வழக்கங்களையும் நீட் தகர்த்துள்ளது.