1. Home
  2. தமிழ்நாடு

நான் வடிவமமைத்த ராமர் சிலை இப்போது உருமாறி விட்டது : சிற்பி பேட்டி..!

1

கடந்த 22 ஆம் தேதி ராமர் கோவிலில் பிரான பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவில் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்து வைத்தார். 

பிரான பிரதிஷ்டை நிகழ்வுக்கு பிறகு கடந்த 23 ஆம் தேதி முதல் பக்தர்கள் ராமரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பால ராமர் சிலையை செதுக்கிய சிற்பி அருண் யோகிராஜ், பிரான பிரதிஷ்டைக்கு பிறகு அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. 

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், அயோத்தி ராமர் கோவிலுக்காக நான் வடிவமைத்த ராமர் திருமேனி பிராண பிரதிஷ்டை செய்து முடித்த பிறகு உருமாறி விட்டது. குழந்தை ராமர் சிலையில் கண்ணும் முக பாவனையும் அப்படியே மாறி தோற்றமளிக்கிறது. நான் வடிவமைத்தபோது ராமர் சிலை இப்படி இல்லை.இதனை என்னாலேயே நம்ப முடியவில்லை. ராமரின் திருமேனியை வடிவமைக்கும் போது நாள்தோறும் ஒரு குரங்கு எங்கள் இடத்திற்கு வந்து பார்த்துவிட்டு சென்றது. பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு குழந்தை ராமர் சிலையில் பல வித்தியாசங்கள் காணப்படுகிறது. சிலை உருமாறி காட்சியளிக்கிறது.. இவ்வாறு சிற்பி அருண் யோகிராஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் கும்பாபிஷேகத்தையொட்டி சிற்பி அருண் யோகிராஜ் அவரது மனைவி விஜிதாவை 6 மாதம் பிரிந்து தீவிரமாக பணியாற்றியது தெரியவந்துள்ளது. இதுபற்றி அவரது மனைவி விஜிதாதாவே கூறியுள்ளார். அதாவது கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அருண் யோகிராஜ் விமானம் மூலம் அயோத்தியில் இருந்து பெங்களூர் வந்திறங்கினார். அப்போது அவரை வரவேற்க வந்த மனைவி விஜிதா கூறியதாவது:‛‛என் கணவர் கடந்த 6 மாதங்களாக நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இருப்பினும் சவால்களை சமாளித்து அவர் வெற்றி பெற்றுள்ளார்.

அருண் யோகிராஜ் மட்டுமின்றி மேலும் 2 பேரும் ராமர் சிலையை வடித்தனர். இதில் அருண் யோகிராஜ் சிலை தான் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் தேர்வு செய்யப்பட்டது. இந்த சிலை வடிப்பு பணியில் அவர் கடந்த 6 மாதங்களாக மிகவும் கவனமாக வேலை செய்து வந்தார். மனைவியை பிரிந்து அயோத்தியில் தங்கி சிலை செதுக்கினார்.

Trending News

Latest News

You May Like