அப்பா காப்பாத்துங்க என போனில் கதறிய மகன்.. பதறியடித்து சென்ற தந்தை கண்ட கொடூரக் காட்சி !

அப்பா காப்பாத்துங்க என போனில் கதறிய மகன்.. பதறியடித்து சென்ற தந்தை கண்ட கொடூரக் காட்சி !

அப்பா காப்பாத்துங்க என போனில் கதறிய மகன்.. பதறியடித்து சென்ற தந்தை கண்ட கொடூரக் காட்சி !
X

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ஏரியில்  மீன் பிடிப்பதற்காக நெருங்கிய நண்பர்கள் மூன்று பேர் இரவு 10 மணிக்கு சென்றுள்ளனர். அவர்களின் ஒருவரான ரோலிண்ஸ் தன் தந்தையை போனில் அழைத்து அப்பா உதவுங்கள் என்று மட்டும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளைஞரின் தந்தை உடனே ஏரிக்குச் சென்று தன் மகனை தேடியுள்ளார். பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு தன் மகனையும் அவன் நண்பர்களையும் கண்டுபிடித்துள்ளார். 

அச்சமயத்தில் தனது மகன் ரோலிண் மட்டும் உயிருக்கு போராடிய நிலையில் இருக்க அவரின் நண்பர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள் ரோலின்ஸும் இறந்துவிட்டார். 

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மூவரும் பயங்கரமான முறையில் தாக்கப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறியுள்ளனர்.

ரோலிண்ஸ் வருவதற்கு முன்னரே அவரின் இரு நண்பர்களும் டில் மேன் ஏரிக்கு சென்றிருக்கலாம் எனவும் அவர்களை குழுவாக தாக்கியவர்கள் பின்னர் கொன்று இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அச்சமயத்தில் ரோலிண்ஸ் அங்கு சென்றதால் அந்நபர்கள் அவரையும் துப்பாக்கியால் சுட்டுகொலை செய்ததாக போலீசார் கூறியுள்ளனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த ரோலிண்ஸ் தன் தந்தையை உதவிக்கு அழைத்ததால் இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. 

இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய உதவும் நபருக்கு 5000 டாலர் பரிசாக வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


newstm.in 

Next Story
Share it