தலையில் அம்மிக்கல்லை போட்டு தாயை கொன்ற மகன்.. விசாரணையில் அதிர்ச்சி !

தென்காசி மாவட்டம் கடங்கநேரி கிராமத்தில் இசக்கியம்மாள் -சுப்பிரமணியன் தம்பதியர் வசித்து வருகின்றனர். இவரது மகன் மணிரத்தினம்.
மணிரத்தினம் கடந்த ஓராண்டுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கியதை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தார். எனினும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர் அவ்வப்போது ஏதாவது குழப்பமான செயலை செய்து வருவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் படுந்திருந்த தாயாரின் தலையில் மணிரத்தினம் அம்மிக் கல்லை போட்டுள்ளார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் பெட்ரோலை தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டுள்ளார். இதனால் உடலில் தீ பற்றி எரிந்தநிலையில், அவரது அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து காப்பபாற்றினர்.
உடலில் தீக்காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் லேசான அளவில் மட்டுமே தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட இசக்கியம்மாள் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
newstm.in