பெரியாருக்கு கொடுத்த சாக்ரடீஸ் விருது பொய்யானது!?

பெரியாருக்கு கொடுத்த சாக்ரடீஸ் விருது பொய்யானது!?

பெரியாருக்கு கொடுத்த சாக்ரடீஸ் விருது பொய்யானது!?
X

பெரியாருக்கு UNESCO கொடுத்த தெற்காசியாவின் சாக்ரடீஸ் விருது பெரிய பொய் என்று உறுதிப்படுத்தியுள்ளதாக பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், 40 ஆண்டுகள் மேல் பள்ளிகளில் குழந்தைகள் முதல் அரசு வேலை தேடும் இளைஞர்கள் வரை அனைவரும் திராவிட சித்தாந்தத்திற்குப் பல பொய்கள் மூலம் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார். ஏமாற்றியதற்காக திமுக, திக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இதை மக்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும், படிக்கப் பிள்ளைகளை அனுப்பிவைத்தால் மூளைச்சலவை செய்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார். 


அனைவரும் இதற்குக் குரல் எழுப்ப வேண்டும் , பள்ளி பாடப்புத்தகத்திலிருந்து அந்த தகவல் நீக்குவதோடு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து நீக்க அரசு உத்தரவிட வேண்டும். அதற்கு மக்கள் , மாணவர்கள், இளைஞர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு பெரியார் தரப்பு விரைவில் பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

Next Story
Share it