1. Home
  2. தமிழ்நாடு

'மீன் நாற்றம் வருகிறது'.. மீனவ மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர்.. பலரும் கண்டனம் !

'மீன் நாற்றம் வருகிறது'.. மீனவ மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர்.. பலரும் கண்டனம் !


மீன் வியாபாரம் செய்துவிட்டு வந்த மூதாட்டியை, உடலில் துர்நாற்றம் வீசுவதாக அரசு பேருந்தில் இருந்து நடத்துநரால் இறக்கி விடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் ஒரு மூதாட்டி செல்வம் மீன் விற்றுவிட்டு வந்துள்ளார். பின்னர் அருகேயுள்ள வாணியக்குடி மீனவ கிராமத்துக்கு செல்ல அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது செல்வத்தை கண்ட பேருந்து நடத்துநர் அவர் மீது நாற்றம் வீசுவதால் பேருந்தில் பயணிக்க முடியாது எனக் கூறி பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளார்.

'மீன் நாற்றம் வருகிறது'.. மீனவ மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர்.. பலரும் கண்டனம் !

மீன் நாற்றம் வருவதாக கூறி பேருந்தில் இருந்து கீழே இறக்கிவிட்ட சம்பவம் அந்த மூதாட்டிக்கு பெரும் மனஉளைச்சலை கொடுத்தது. இதனால், ஆத்திரமடைந்த மூதாட்டி பேருந்து நிலைய நேர கட்டுப்பாட்டு அலுவலகம் முன் சென்று, இது என்ன நியாயம், பேருந்தில் ஏறிய என்னை எப்படி இறக்கி விடலாம்? பெட்டிசன் கொடுப்பேன் என தட்டிக்கேட்டுள்ளார்.

மூதாட்டியை இறங்கி விட்ட நடத்துநரோ, என்ன நடத்தது என்று ஒன்றும் அறியாதவர்போல் நேரக்கட்டுப்பாட்டு அலுவலகம் முன் நிற்க, அந்த மூதாட்டியோ "மீன் வித்திட்டா வர்றே? நாறும் இறங்கு இறங்கு"என்று நடத்துநர் கூறியதாக சொன்னதோடு, வாணியக்குடி வரை தான் நடக்க வேண்டுமா என கண்கலங்கிய படி பேருந்து நிலைய சுற்றுச் சுவரில் சாய்ந்து நின்றார்.

'மீன் நாற்றம் வருகிறது'.. மீனவ மூதாட்டியை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர்.. பலரும் கண்டனம் !

இந்த காட்சிகளை பேருந்து நிலையத்தில் நின்ற ஒருவர் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற தற்போது அது வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் சார்ந்த தொழில் தான் பிரதானம். ஆனால், மீனவ பெண்ணை, மீன் நாற்றம் என காரணம் கூறி கீழே இறக்கிவிட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடத்திலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த குளச்சல் அரசு பேருந்து பணிமனை மேலாளர், தொடர்புடைய நடத்தனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

newstm.in

Trending News

Latest News

You May Like