1. Home
  2. தமிழ்நாடு

இன்று பூமிக்கு அருகில் வரும் சிறிய கோள்!!

இன்று பூமிக்கு அருகில் வரும் சிறிய கோள்!!


சூரிய மண்டலத்தில் சுற்றிவரும் சிறிய கோள் இன்று பூமிக்கு அருகில் வர உள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சூரிய மண்டலத்தை சுற்றி வரும் இந்த சிறிய கோளானது, "ஆஸ்டராய்டு" என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய சிறிய கோள்களில் ஒன்று பூமிக்கு அருகே இன்று மாலை 4.51 மணிக்கு வரவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

இந்த சிறியகோள் மணிக்கு 47 ஆயிரத்து 344 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறிய கோளானது மூன்றாயிரத்து 300 அடி வரை பிரமாண்ட உயரம் கொண்டது.

இன்று பூமிக்கு அருகில் வரும் சிறிய கோள்!!

ஆனாலும் இதனால் பூமிக்கு ஆபத்து குறைவே என்று தெரிவித்துள்ளனர். இத்தகைய பிரமாண்ட சிறுகோள்கள் பூமியை தாக்குவது ஆறு லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அபூர்வ நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

சூரிய மண்டலத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய கோள்கள் பூமிக்கு அருகில் உள்ளதாக தெரிவிக்கும் நாசா விஞ்ஞானிகள், இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை பூமியை தாக்கக் கூடியவையாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like