காதலுக்கு எதிரியான தங்கை – கொன்று பழி தீர்த்த அக்கா ..!

முன்பெல்லாம், அக்கா தங்கை பாசம் அப்படி இருக்கும். எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது, ஒன்றாக சேர்ந்து கொண்டு அப்பா அம்மாவிற்குத் தெரியாம கூட்டுக் களவாணித் தனம் செய்வது, என்று மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள். இருவருக்குமிடையே சண்டை வந்தாலும் கூட, அந்த சண்டையை மீறி ஒற்றுமையே மிகுந்திருக்கும்.
இப்போது காதலுக்குத் தடையாக தங்கை இருக்கிறாள் என்று அக்காவே தங்கையை கொன்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. இச்சம்பவம் உத்தரபிரதேசத்தின் வாரணாசியின், மிர்சாபூரில் உள்ள ஒரு கிராமத்தில் தான் நடந்துள்ளது.
அங்கு ஒரு வீட்டில் உள்ள பெற்றோருக்கு 15 வயது மற்றும் 11 வயதில் என்று இரண்டு மகள்கள் இருந்தனர். இதில் பதினைந்து வயது பருவச் சிட்டுக்கு காதல் வந்தது. காதல் வந்த அந்த பெண், அவரது பெற்றோர் வீட்டில் இல்லாத நேரமெல்லாம் தனது காதலனை, தனது வீட்டிற்கு அழைத்து வந்து காதலனிடம் காதலை நன்கு அனுபவித்து வந்துள்ளார்.
இதனைப் பார்த்து விட்ட தங்கை அக்காவைக் கண்டித்துள்ளார். ஒருவேளை இதனை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், பெற்றோரிடம் இந்த காதல் ரகசியத்தை சொல்லி விடுவதாகக் கூறி மிரட்டி உள்ளார். இந்நிலையில் பெற்றோர்களுக்கு, தங்களது மூத்த மகளை விட இளைய மகள் மீது தான் அதிக பாசமாம்.
இதுவும் அதுவுமாக ஒன்று சேர்ந்து அக்காவை தங்கையை கொலை செய்யத் தூண்டியுள்ளது. சம்பவத்தன்று, அக்கா, தனது காதலனோடு தங்கையையும் சேர்த்து மிர்சாபூருக்கு அழைத்து சென்று, அங்கு அக்காவும், அவளின் காதலனும் சேர்ந்து தங்கையை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.
அதன்பின் தங்கையின் பிணத்தை அங்கிருந்த தண்டவாளத்தில் தூக்கி எறிந்து விட்டு வீடு வந்து சேர்ந்தார் அக்கா. மறுநாள் தனது மகளைக் காணாத பெற்றோர் பதறி அங்கிருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வந்து நடத்திய விசாரணையில், அக்காவே தனது சந்தோஷத்திற்கு தடையாக இருந்த தங்கையை கொன்று ரயில்வே தண்டவாளத்தில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, போலீசார் அக்காவையும், அக்காவின் காதலனையும் கைது செய்துள்ளனர்.