கேக் ஆர்டர் கொடுக்கவந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த கடைகாரர்.. கும்மாங்குத்து குத்திய கணவன் !!

திருவேற்காட்டில் கேக் வாங்க வந்த பெண்ணின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட நபரை, புகார்தாரர்களே அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அர்ஜுன மேடு பகுதியில் மணி முத்துவேலன்(36) - அவரது மனைவி என குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவியின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்ததால் செல்போனில் அழைத்த நபரிடம் விசாரித்த போது, செல்போன் எண் சமூக வலைதளத்தில் கிடைத்ததாக கூறியுள்ளார்.
இதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என எண்ணிய மணி முத்துவேலன், போலீசாரிடம் புகார் அளித்தார். மேலும் சமூக வலைதளத்தில் தனது மனைவியின் எண்ணை பரவ விட்ட நபரையும் தேடினார்.
அப்போது மனைவியின் எண்ணுக்குக செல்போனில் அழைத்து பேசிய நபர் குறிப்பிட்ட சமூக வலைதளப் பக்கத்தை முத்து சென்று பார்த்துள்ளார். அதில் அவரது மனைவியின் புகைப்படத்தை அவதூறாக சித்தரித்து அதில் செல்போன் எண் இருந்தது தெரியவந்தது.
அதன்மூலம் தேடியப்போது அவரது மனைவியின் செல்போன் எண்ணை பதிவிட்டது அங்குள்ள பேக்கரியில் பணியாற்றி வந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது உறவினரின் பிறந்த நாளுக்கு கேக் ஆர்டர் செய்ய வந்த முத்துவின் மனைவியிடம், டெலிவரி செய்ய வேண்டும் என்று கூறி வலுக்கட்டயாமாக செல்போன் எண்ணை வாங்கியதும் அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபரை அழைத்து மன்னிப்பு கேட்க வைத்த உறவினர்கள் அவரை திருவேற்காடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து சிம் கார்டுகளை பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in