எண்ணெய் வயலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் திடீரென வெடித்துச் சிதறியது..!!
நைஜீரியாவின் தென்மேற்கிலுள்ள நைஜர் டெல்டா பகுதியில் எண்ணெய் வயல் உள்ளது. இந்த பகுதியில் ஷேபா ஆய்வு மற்றும் உற்பத்தி நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் எண்ணெய் உற்பத்தி, சேமிப்பு மற்றும் இறக்கும் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.
2 மில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெய் சேமித்து வைக்கும் திறன் கொண்ட அந்த டிரினிட்டி ஸ்பிரிட் என்ற கப்பல் நேற்று காலையில் திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் கப்பல் தீப்பிடித்து, கரும்புகை வெளியேறியது. கப்பலில் இருந்த ஊழியர்களின் நிலை என்னவானது என்பது தெரியவில்லை. உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்து ஏற்பட்டபோது 10 ஊழியர்கள் கப்பலில் இருந்ததாக ஷேபா நிறுவன தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். தீயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விபத்துக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. கப்பல் தீப்பிடித்து எரியும் காட்சி மற்றும் அதிலிருந்து கரும்புகை எழுந்ததை கரையில் இருந்த ஊழியர்கள் மற்றும் மீனவர்கள் பீதியுடன் பார்ப்பதுபோன்ற வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
BREAKING — Oil Production Vessel Explodes Off the Coast of Nigeria#Nigeria pic.twitter.com/pbVXBHF3RF
— World Defense News (@WorldDfenceNews) February 3, 2022