1. Home
  2. தமிழ்நாடு

சண்டை மூட்டிய சீனாவுக்கு பாடம் புகட்டிய செம்மறி ஆடுகள்.. பழைய வரலாற்று நினைவு..

சண்டை மூட்டிய சீனாவுக்கு பாடம் புகட்டிய செம்மறி ஆடுகள்.. பழைய வரலாற்று நினைவு..


இந்தியா- சீனா எல்லை மோதல் இன்று நேற்று தொடர்ந்தது அல்ல. சுமார் அரை நூற்றாண்டு காலமாக இந்த மோதல் நீடிக்கிறது. கடந்த 1962ஆம் ஆண்டு போருக்கு பின்னர் மீண்டும் இருநாடுகளிடையே பதற்றம் உருவாகியுள்ளது.

இருநாடுகளிடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் எல்லையில் சீனாவின் சீண்டுதல் போக்குகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

1962ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சீனா நடத்திய யுத்தம் அவர்களுக்கு சாதகமாக இருந்தது. இதே நினைப்புடன்தான் மீண்டும் ஒரு போரை நடத்த திட்டம் தீட்டி வந்தது சீனா. இதற்காக கடந்த 1965ஆம் ஆண்டு செம்மறியாடுகள் விவகாரத்தை கிளப்பியது சீனா. 

சண்டை மூட்டிய சீனாவுக்கு பாடம் புகட்டிய செம்மறி ஆடுகள்.. பழைய வரலாற்று நினைவு..

 அப்போது இந்திய அரசுக்கு சீனா ஒரு கடிதம் அனுப்பியது. அதில், எல்லையில் இந்திய வீரர்கள் 800 செம்மறியாடுகளையும் 59 காட்டு எருதுகளையும் திருடிவிட்டனர் என்ற புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரை எழுத்துப்பூர்வமாகவே இந்திய அரசும் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. 

எனினும் அப்போது எம்பியாக இருந்த வாஜ்பாய் சீனாவின் நடவடிக்கையை கண்டித்து ஒரு நூதனப் போராட்டத்தை டெல்லி வீதிகளில் நடத்தினார். சீனா புகார் கூறிய 800 செம்மறியாடுகளை ஒரே நேரத்தில் கொண்டு வந்து டெல்லியில் உள்ள சீனா தூதரகத்துக்குள் ஓட்டிவிட்டார்.

அந்த செம்மறியாடுகளின் கழுத்தில் எங்களை சாப்பிட்டுவிட்டு உலகத்தை காப்பாற்றுங்கள் என்கிற வாசகத்தையும் கட்டிவிட்டார். இந்த செம்மறியாடு விவகாரம் சீனாவை மிகவும் கோபமடையவைத்துவிட்டது.

அப்போதைய லால்பகதூர் சாஸ்திரி அரசுக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியது. அதில், இந்திய அரசின் ஆதரவுடன் சீனாவை அவமானப்படுத்தும் வகையில்தான் செம்மறியாடுகளை ஓடவிடும் போராட்டம் நடத்தப்பட்டது என சீனா குற்றமும் சாட்டியிருந்தது. 

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, டெல்லியில் செம்மறியாடுகளை ஓடவிட்டு போராட்டம் நடைபெற்றது உண்மைதான். ஆனால் அதற்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் பதிவு செய்தது. 
 

newstm.in 

Trending News

Latest News

You May Like