ஆஞ்சநேயர் பிறப்பு ரகசியம் ஏப்ரல் 21-ல் வெளியீடு! திருப்பதி தேவஸ்தானம் !

ஆஞ்சநேயர் பிறப்பிடம் பற்றிய தகவல்களை நிபுணர் குழு அமைத்து ஆய்வு ஒன்றை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதுகுறித்த முடிவுகளை வெளியிடப் போவதாக அறிவித்திருந்த நிலையில் ஏப்ரல் 21ம் தேதி ராமநவமி அன்று வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள அஞ்சனாத்திரி மலை ஆஞ்சநேயரின் பிறப்பிடம் என்பதற்கான அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நடத்தப்பட்ட ஆய்வில் 6 பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு புராணங்கள் குறித்து ஆராய்ந்து தகவல்களை சேகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21ம் தேதி ராமநவமி அன்று ஆஞ்சநேயர் பிறப்பு குறித்த தகவல்களும், ஆதாரங்களும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in