மாஸாக வெளியான லியோ படத்தின் இரண்டாவது பாடல்..!
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை த்ரிஷா, நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஸ்கின், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் பிறந்தநாள்களை முன்னிட்டு சிறப்பு கிளிம்ப்ஸ் விடியோக்களை படக்குழு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் 4 நாட்களுக்கு போஸ்டர் விருந்து தரப்போவதாக ‘லியோ’ படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த 21-ம் தேதி ‘லியோ’ படத்தின் தமிழ் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அந்த பதிவில் “மிளக தட்டி முட்டி.. என்ன குக் பண்றீங்க ப்ரோ என்று கேட்ட அனைவருக்கும் அக்டோபர் 19 அன்று விருந்து” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் நேற்று லியோ படக்குழு இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தெரிவித்திருந்தனர். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தது என்றே கூறலாம்.
இந்த நிலையில் 4 நாட்களுக்கு போஸ்டர் விருந்து தரப்போவதாக ‘லியோ’ படக்குழு அறிவித்திருந்தது. அந்த வகையில் கடந்த 21-ம் தேதி ‘லியோ’ படத்தின் தமிழ் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அந்த பதிவில் “மிளக தட்டி முட்டி.. என்ன குக் பண்றீங்க ப்ரோ என்று கேட்ட அனைவருக்கும் அக்டோபர் 19 அன்று விருந்து” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் நேற்று லியோ படக்குழு இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தெரிவித்திருந்தனர். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி இருந்தது என்றே கூறலாம். இந்த நிலையில், விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக லியோ படத்தின் இரண்டாவது பாடலான படாஸ் (Badass) எனக் குறிப்பிட்டு ஒரு போஸ்டரை படக்குழு பகிர்ந்திருந்தது.
இந்நிலையில், லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் 'badass ma,leo dass ma' பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் விஜயின் கதாபாத்திரத்தை விவரிப்பதாக உள்ள இந்த பாடல் படத்தின் அறிமுக பாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.