முறட்டு குத்துவின் இரண்டாம் குத்து.. பரபரக்கும் முதல் லுக்.. எதிர்பார்ப்பும்.. எதிர்ப்பும் !

ஜெயக்குமார் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து. கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, கருணாகரன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அடல்ட் காமெடி ரசிகர்கள் மத்தியில் யங்ஸ்டர்ஸை குறிவைத்து வெளிவந்த இப்படம் இளைஞர்கள், பதின்ம வயதினர் இடையே வரவேற்பை பெற்றது. எனினும் இப்படத்திற்கு எதிர்ப்பும் எழுந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்திற்கு 'இரண்டாம் குத்து' என தலைப்பு வைத்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமாரே 2ஆம் பாகத்தை இயக்கி அதில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் ஆகியவை நேற்று மாலை வெளியானது. அதனை அறிவிக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு இப்போது வெளிட்டது. அந்த போஸ்டரே இப்படி இருந்தால் முதல் லுக் எப்படி இருக்கும், டீசர், படம் எப்படி இருக்கும் என எதிர்ப்பு எழுந்துள்ளது.
அதேநேரத்தில் போஸ்டரில் வாழைப்பழத்தை வைத்து சர்ச்சையையும் உண்டாகிவிட்டார் இயக்குநர். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிட்டது. சென்சார் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது.
‘இரண்டாம் குத்து’ வில் மீனாள், ஹரிஷ்மா, அக்ரிதி, ரவி மரியா, சாம்ஸ், பிக் பாஸ் டேனி, டி.எஸ்.கே, ஷாலு ஷமு, லொள்ளு சபா மனோகர், லொள்ளு சபா சாமிநாதன், சிங்கம் புலி என ஒரு நட்சத்திர பட்டாளமே உள்ளது.
newstm.in