பிரதர் படத்தின் இரண்டாம் அறிவிப்பு வீடியோ வெளியானது..!
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் ஜெயம் ரவிக்கு கடந்த சில காலங்களாக படங்கள் பெரியதளவில் வெற்றியை தேடி தரவில்லை. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் வெளிவந்த இறைவன், சைரன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
இதற்கிடையில் தற்போது ஜெயம் ரவி சுவாரசியமான பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். குறிப்பாக ”வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ்” நிறுவனம் மூலம் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் அர்ஜுனன் இயக்கத்தில் வெளியாக உள்ள ’ஜீனி’ படத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது. 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு பின் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் எட்டாவது தயாரிப்பில் அனைத்து ரசிகர்களும் கண்டு மகிழும் வகையில் கலகலப்பான குடும்ப படமாக ராஜேஷ் இயக்கத்தில் ’பிரதர்’ படம் உருவாகி வருகிறது. அதேபோல கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை, மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 ஆகிய படங்களும் வரிசையில் உள்ளது.
பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதன் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் அறிவிப்பு வீடியோவும் வெளியாகியுள்ளது. ஸ்கிரீன் செவன் தயாரிப்பில் பிரியங்கா மோகன், பூமிகா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் திரைக்கு வரவுள்ளது. ஒரு கல் ஒரு கண்ணாடிக்கு பிறகு இயக்குநர் ராஜேஷ், இசையமைப்பாளர் ஹாரிஸ் மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் பாடல்கள் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.
படத்தின் டிஜிட்டல் மட்டும் சாட்டிலைட் உரிமையை 37 கோடி ரூபாய் கொடுத்து ஜீ தமிழ் மற்றும் ஜீ 5 நிறுவனம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் வாங்கியுள்ளது.
இந்நிலையில் பிரதர் படத்தின் அடுத்த அப்டேட்டை இன்று காலை 11:11 மணிக்கு வெளியிடப்போவதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதே போல் பிரதர் படத்தின் இரண்டாவது அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது.