ஓடும் ரயிலில் கேட்ட இளம் பெண்ணின் அலறல் சத்தம்.. டிடிஆரால் ஏற்பட்ட பரபரப்பு !

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண், கோவையில் உள்ள கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் கோவைக்கு கல்லூரிக்கு சென்றுவிட்டு கொளத்தூருக்கு ரயிலில் திரும்பினார்.
அதிகாலையில் ரயில் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே சென்றப்போது கல்லூரி மாணவி கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கழிவறையின் வெளியே நின்ற டிக்கெட் பரிசோதகர் மாணவியை செல்போனில் ஆபாசமாக படம் பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அத்துடன் டிக்கெட் பரிசோதகரின் செயலை கவனித்த மாணவி கூச்சல் சத்தம் போட்டதால் சக பயணிகள் அங்கு குவிந்தனர். பின்னர் மாணவி நடந்ததை கூறியதையடுத்து டிக்கெட் பரிசோதகரின் செல்போனை பறித்து பரிசோதனை செய்தபோதுபோது, அவர் மாணவியை படம் பிடிக்க முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து மாணவி ரயில்வே ஹெல்ப் லைனில் தெரிவித்த புகாரை அடுத்து, டிக்கெட் பரிசோதகரை ரயில்வே போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் சேலம் சூரமங்கலத்தைச் சேர்ந்த மேகநாதன் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்மீது வழக்கு பதிவு செய்த ரயில்வே காவல்துறையினர் வேலூர் மத்திய சிறையில் மேகநாதனை அடைத்தனர்.
newstm.in