ரிதன்யா வழக்கு! கணவருக்கு ஜாமீன் மறுப்பு.. மாமியாரும் கைது!

கொடுமையால் ரிதன்யா என்ற இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருமணமான நாளில் இருந்தே கணவர் கவின்குமார்,. அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாய் சித்ராதேவி ஆகியோர் தொடர்ந்து ரிதன்யாவை சித்திரவதை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ரிதன்யா மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ள நிலையில், கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு காரில் மொண்டிப்பாளையம் கோவிலுக்கு சென்றபோது, வழியிலேயே காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவரது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் சில ஆடியோக்களை அனுப்பிவிட்டு, பூச்சி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த ஆடியோ வெளியாகி வைரலான நிலையில், கேட்போரின் நெஞ்சை பதற வைத்தது. அந்த ஆடியோவில் ரிதன்யா, கவின் மற்றும் அவரது பெற்றோர் தன்னை உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் கொடுமைப்படுத்தி வருகின்றனர் என்றும் கவின்குமாருடன் வாழ விருப்பம் இல்லை என்றும் அந்த அளவிற்கு நான் தைரியமானவள் இல்லை என்றும் வேறு ஒருவருடனும் என்னால் வாழ முடியாது. என்றும் எனது வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் என அழுதபடியே கூறினார்.
இதனைத் தொடர்ந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், ரிதன்யாவின் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கவின்குமார் மற்றும் ஈஸ்வரமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவியையும் தனிப்படை போலீசார் இன்று (ஜூலை 04) கைது செய்துள்ளனர். இதற்கிடையில் ரிதன்யா கணவர் கவின் குமார் ஜாமீனுக்காக மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை திருப்பூர் நீதிமன்றம் ஜூலை 7ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டது.