விடியறதுக்குள்ள உண்மை குற்றவாளிகளை அரெஸ்ட் பண்ணியே ஆகணும்... கதறி அழுத பா.ரஞ்சித்..!
சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்து வருகிறார். தற்போது, தனது வீட்டின் அருகே இருந்த பழைய வீட்டை இடித்து விட்டு, புதிய கட்டி வருகிறார்.தினமும் மாலை கட்டுமானப் பணிகளை பார்வையிடுவது வழக்கம். அந்த வகையில், இன்றும் சென்றிருந்தார். அங்கு, கட்டுமானப் பணிகள் தொடர்பாக சிலருடன் பேசிக் கொண்டார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரை சரமாரிய வெட்டி விட்டு தப்பியோடியது. உடனிருந்த இருவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதையடுத்து, 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பகுஜன் கட்சி தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. போலீசார் குவிக்கப்பட்டனர். விடியறதுக்குள்ள உண்மை குற்றவாளிகளை அரெஸ்ட் பண்ணியே ஆகணும். சும்மா விட்றக் கூடாது . ஒரு அரசியல் கட்சி மாநில தலைவருக்கே இங்க பாதுகாப்பு இல்லையா? என கொந்தளித்து பேசினர்.இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இயக்குநர் பா.ரஞ்சித் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
#BREAKING | பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித்#Chennai | #Armstrong | #BahujanSamajParty | #BSP | #Murder | #PaRanjith pic.twitter.com/SsT31PMaNk
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 5, 2024