நிஜமான பாபா வங்காவின் கணிப்பு.. மக்கள் பீதி..!
பல்கேரிய ஜோதிடரான பாபா வங்கா 1996 ஆம் ஆண்டு காலமானார். அவரது கணிப்புகள் தொடர்ந்து பலருக்கு எச்சரிக்கையாக உள்ளது. குறிப்பாக அவரது கணிப்புகளில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என கணித்திருந்தார்.
பாபா வாங்காவின் கணிப்புகளின்படி, ட்ரம்ப் ஒரு மர்மமான நோயை எதிர்கொள்வார் என்றும் அது அவரை காது கேளாதவராகவும், மூளைக் கட்டியால் பாதிக்கப்படுவதாகவும் இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் டொனால்ட் ட்ரம்ப் இந்த குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சினைகளை அனுபவிக்கவில்லை என்றாலும், சமீபத்திய கொலை முயற்சி அவரது வாழ்க்கை ஆபத்தில் இருப்பதைப் பற்றிய அவரது தீர்க்கதரிசனத்தை நிஜமாக்கியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் முதல் சுற்றில் 3 குண்டுகள், 2வது சுற்றில் 5 குண்டுகள் என மொத்தம் 8 குண்டுகள் பாய்ந்தது விசாரணையில் தெரியவந்தது. இதில் ஒரு குண்டு மட்டும் ட்ரம்ப்பின் வலது காதின் மேல் பகுதியை துளைத்தபடி சென்றதில் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டார் ட்ரம்ப். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பாபா வங்கா ஏற்கனவே கணித்தப்படி 2024 ஆம் ஆண்டில் ட்ரம்பின் காதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பாபா வங்காவின் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கணிப்பின்படி ரஷ்ய அதிபர் புடின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவரது மற்ற கணிப்புகளும் பலித்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கனவே இரட்டை கோபுர தாக்குதல், குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து, டயானா மரணம், பிரிக்ஸிட் போன்றவை நிஜமாகியுள்ளன.
.png)