வரும் 16 -ம் தேதி வெளியாகிறது மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல்..!!

எம்பிபிஎஸ், மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மெரிட் பட்டியல் வரும் 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டு மருத்துவ படிப்புக்கு, 39,924 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், 39,924 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், 32,649 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.பெற்றோர் கோரிக்கையை ஏற்று, வரும், 12ம் தேதி -வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும், 16ல் வெளியிடப்படும்.
மேலும் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 1,021 பணியிடங்களை ஒரு மாதத்திற்குள் நிரப்ப, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறினார்