மறு அறிவிப்பு வரும் வரை இந்த ரயில் நிலையம் மூடல்..!
தென் மாவட்டங்களை ஸ்தம்பிக்கச் செய்த இந்த மழையால், ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
திருநெல்வேலி ரயில் நிலையம் முழுவதும் வெள்ளக்காடாக மாறிய நிலையில், தண்டவாளங்கள் தெரியாத அளவுக்கு, நடைமேடைக்கு ஈடாக வெள்ள நீர் தேங்கியிருந்தது.
இதனால், நெல்லையில் 2 நாட்களாக ரயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மழை நின்றதால் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது.தண்டவாளங்களில் நின்ற வெள்ள நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளதாகவும், படிப்படியாக தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீரை முழுமையாக வெளியேற்றும் வரை திருநெல்வேலி ரயில் நிலையம் மூடப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது