கிரிவல பக்தர்களால் ரயில் நிலையம் ஸ்தம்பித்தது..!!
மார்கழி மாத பௌர்ணமியையொட்டி, 10 லட்சத்திற்கும் அதிகமானோர் விடிய விடிய கிரிவலம் சென்றனர். அவர்கள் வசதிக்காக தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அத்துடன், மூன்று சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.
இருப்பினும் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் குவிந்ததால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்களின் வசதிக்காக, கூடுதல் பேருந்து, ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே உள்ளது.
மார்கழி பௌர்ணமி என்பதாலும், ஆருத்ரா தரிசனம் என்பதாலும் பக்தர்கள் அதிகளவில் திருவண்ணாமலையில் குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.