அ.தி.மு.க. எழுப்பிய கேள்வி…. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (அக்.10) மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தோரில் தகுதியானோருக்கு ரூபாய் 1,000 வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் 9 லட்சம் பேர் இதுவரை மேல்முறையீடு செய்துள்ளனர். நிதி நிலைமை மோசமாக இருந்ததால், தாமதமாக மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது” என்றார்.
அதைத் தொடர்ந்து, பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “முழுக்க முழுக்க தகுதியானவர்களுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.