செயின் பறித்த இளைஞர்களை கட்டிவைத்து உரித்த பொதுமக்கள்!

கோவையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் ரத்தினா என்ற பெண் நடந்து சென்ற போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரில் ஒருவர் அந்தப் பெண்ணின் நகையை பறிக்க முயன்றார். உடனடியாக, சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் அந்த இளைஞரை பிடித்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் இளைஞர்கள் இருவரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஒன்று கூடி தர்ம அடி கொடுத்தனர்.
பின்னர் இருவரையும் கட்டி வைத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீஸார் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் போத்தனூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகூப், ரத்துல் என்பது தெரியவந்தது.
newstm.in