1. Home
  2. தமிழ்நாடு

பொதுமக்கள் அதிர்ச்சி..! வெங்காயம் விலை 2 மடங்காக உயர்வு..!

1

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு மொத்த விலைக்கு கோயம்பேட்டில்  விற்பனை செய்யப்படுகின்றன.இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கும் காய்கறிகள் சில்லறை விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், சமையலில் முக்கிய அங்கம் வகிக்கும் தக்காளி 2 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.175 வரை உயா்ந்திருந்தது. இந்த விலை உயா்வால் ஏழை, நடுத்தரக் குடும்பத்தினா் பெரும் அவதிக்குள்ளாகினா்.இதனால், நியாயவிலைக் கடைகளில் தக்காளி குறைந்த விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு, தக்காளி விலை படிப்படியாகக் குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது.இந்த நிலையில், தற்போது வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவது மீண்டும் ஏழை, நடுத்தரக் குடும்பத்தினரை அவதிக்குள்ளாக்கியுள்ளது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை வேலூரில் கிலோ ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம், தற்போது ரூ.70 முதல் ரூ.80 வரை தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகின்றன.இதேபோல், சின்னவெங்காயம் ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தொடா்ந்து சுப நாள்கள், முகூா்த்த தினங்கள் வருவதால், காய்கறிகள் விலை உயா்ந்துள்ளது. 

ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.130 முதல் ரூ.150 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.70 முதல் ரூ.80 வரையிலும், தக்காளி ரூ.20 முதல் ரூ.25, கத்தரிக்காய் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றனா்.

Trending News

Latest News

You May Like