1. Home
  2. தமிழ்நாடு

பொதுமக்கள் அதிர்ச்சி..! அடுத்தடுத்து நிறைவேறும் பாபா வாங்காவின் ஷாக் கணிப்புகள்..!

1

உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார்.

பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதினார்.அவர் போர்கள், அரசியல் மோதல்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளைப் பற்றி கூறியது பல முறை உண்மையாகியுள்ளது. அந்த வகையில் அவரின் அடுத்தடுத்த பயங்கரமாக கணிப்புகள் பலரையும் நடுங்க செய்கிறது.

ஆசியாவில் பேரழிவு தரும் பூகம்பம் மற்றும் சுனாமியை பாபா வாங்கா முன்னறிவித்ததாக நம்பப்படுகிறது. பாபா வாங்காவின் கணிப்புகளின்படி, எதிர்காலத்தில் ஒரு கடுமையான பொருளாதார பேரழிவு ஏற்படும், இது முக்கியமான சந்தைகளின் சரிவுடன் தொடங்கும். உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்படும், அது வேலையின்மைக்கு வழிவகுக்கும். கடன், பணவீக்கம் மற்றும் நிலையற்ற பொருளாதார அமைப்புகள் பற்றிய உலகளாவிய கவலைகளை இந்த தீர்க்கதரிசனம் பிரதிபலிக்கிறது.

வேற்றுகிரகவாசிகளுடன் ஒரு தொடர்பு இருக்கும் அல்லது வேறொரு உலகத்தைச் சேர்ந்த மக்களை சந்திக்கும் சூழல் உருவாகும் என்று கணித்துள்ளார். அவரது இந்த கணிப்பு வேற்றுகிரகவாசிகள் மற்றும் விண்வெளிப் பயணத்தில் ஆர்வம் அதிகரித்து வருவதைக் குறிக்கின்றன.

சாதி அமைப்பு முடிவுக்கு வரும் என்று கணித்திருந்தார். சமூகத்தில் இன மற்றும் சாதி வேறுபாடுகள் குறைந்து வருவதால், இந்த கணிப்பு வரும் ஆண்டுகளில் நிறைவேறக்கூடும். தோற்றம், நிறம் மற்றும் கலாச்சாரக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், மக்கள் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வார்கள்.

மனித உடலுக்கான செயற்கை உறுப்புகள் கொண்டு வரப்படும் என்று கணித்திருந்தார். பயோபிரிண்டிங் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் அவரின் கணிப்பு நிஜமாகியுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்குள் செயற்கை உறுப்புகள் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

2025ஆம் ஆண்டுக்குள், ஐரோப்பாவின் மக்கள் தொகை குறைந்துவிடும் என்று பாபா வாங்கா கணித்திருந்தார். கண்டத்தின் பிறப்பு விகிதம் வேகமாகக் குறைந்து வருவதால், இந்த கணிப்பு நிறைவேறக்கூடும் என்பது கவனிக்கத்தக்கது. வயதான மக்கள் தொகை குறித்து அங்குள்ள சமூகம் கவலை கொண்டுள்ளது.

2033ஆம் ஆண்டில் கடல் மட்டத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படும் என்று அவர் கணித்தார். காலநிலை மாற்றம் மற்றும் பனிப்பாறை உருகுதல் அவரது கணிப்புகளை நனவாக்கக்கூடும். நீர் மட்டத்தில் மெதுவான ஆனால் நிலையான உயர்வு குறித்து விஞ்ஞானிகள் முன்பு கவலை தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like