அதிர்ச்சியில் திகைத்த பொதுமக்கள்..! திடீரென சென்னை மாலில் பதாகைகளை ஏந்தி அதிமுகவினர் போராட்டம்..!
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில், ‘யார் அந்த சார்?’ என்ற பதாகைகளை ஏந்தி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினீயரிங் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக சென்னை, கோட்டூர் புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே ஞானசேகரன் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் போது சார் என்று அழைத்து யாரிடமோ பேசியது தெரிய வந்துள்ளது.
எனவே ஞானசேகரன் தவிர மேலும் சிலருக்கு இந்த விவாகரத்தில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 'யார் அந்த சார்?' என்ற பதாகைகளை கையில் ஏந்தி அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் “பிரச்னையைக் கையில் எடுத்து முக்கியமான கேள்வியைக் கேட்ட அதிமுக-வுக்கு பாராட்டுகள் என பதிவு செய்துள்ளார்.
Politics can never be about one-upmanship on issues that affect a common man.
— K.Annamalai (@annamalai_k) December 29, 2024
Appreciate @AIADMKITWINGOFL for picking up this issue and asking an important question.#யார்_அந்த_SIR pic.twitter.com/JGDTOAurXE