இனி இந்த யமஹா பைக்களின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது..!

இதுபோல எடுத்துக்காட்டாக பல பைக்களை கூறலாம். அன்று முதல் அனைவருக்கும் பிடித்த விதத்தில் புதிய புதிய அம்சங்களுடம் பல பைக்களை அறிமுகப்படுத்தி வருகிறது இந்த நிறுவனம். இந்நிலையில் தான் தற்போது இந்த நிறுவனத்தின் சில மாடல் பைக்களின் உற்பத்தியை நிறுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
யமஹா நிறுவனத்தின் புகழ் பெற்ற பைக்குகளான Yamaha R1 மற்றும் Yamaha R1M ஆகிய பைக்குகளின் உற்பத்தியை வரும் 2025-ம் ஆண்டில் நிறுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக யமஹா UK நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், யமஹா மோட்டார் குழுவானது R1 மற்றும் R1M இன் EU5+ மாடல் பைக்குகளை இனி உருவாக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் இந்த R1 மற்றும் R1M வாகனங்களுக்கு பதிலாக எதிர்காலத்தில் மக்களின் ரசனை மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்றார்போல கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பானது யமஹா பைக் பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த யமஹா R1 பைக்குகள் முதன்முதலில் 1997-ம் ஆண்டு மிலன் மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு 1998-ம் ஆண்டு வெவ்வேறு சந்தைகளில் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.