1. Home
  2. தமிழ்நாடு

``இளவரசி பிறந்திருக்கிறாள்'' - மகிழ்ச்சியில் ரெடின் கிங்ஸ்லி -சங்கீதா தம்பதி..!

Q

இயக்குனர் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தின் டோனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரை கவர்ந்த கின்ஸ்லி அதற்கு பிறகு டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என நெல்சன் இயக்குனர் அதிகமான படங்களில் மெயின் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் நடிகராவதற்கு முன்பு பிசினஸ்மேனாக இருந்தார். அதுபோல டான்ஸில் இவருக்கு அதிகமான ஆர்வம் இருந்ததால் டான்சராக இருந்து தான் நடிகராக மாறி இருக்கிறார். அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கும் சீரியல் நடிகை சங்கீதாவுக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

கடந்த மாதம் சங்கீதாவுக்கு வளைகாப்பு நடைபெற்ற புகைப்படங்களையும் தங்களின் சோசியல் மீடியா பக்கத்தில் போட்டிருந்தார்கள்.

இதனை தொடர்ந்து இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

.இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி, ``உங்களின் வாழ்த்துகளுக்கும், ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. இளவரசி பிறந்திருக்கிறாள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு திரைதுறையினர் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like

News Hub