ஜனாதிபதியை சந்திக்கிறார் பிரதமர்.. என்ன நடக்கப் போகுதோ..?
ஜனாதிபதியை சந்திக்கிறார் பிரதமர்.. என்ன நடக்கப் போகுதோ..?

பஞ்சாபில், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு விதிமீறல் நடந்தது தொடர்பாக ஜனாதிபதியை பிரதமர் மோடி நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று (5ம் தேதி) பஞ்சாப் சென்றிருந்த பிரதமர் மோடி, ஹுசைனிவாலாவில் தேசிய போர் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்தார். மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டு, சாலை மார்க்கமாக சென்றார்.
அப்போது, ஹுசைனிவாலா அருகே பிரதமரின் கான்வாயை போராட்டக்காரர்கள் மறித்தனர். இதையடுத்து, பிரதமரின் பாதுகாப்பில் மாநில அரசு விதிமீறல் நடந்ததாகவும், அலட்சியமாக செயல்பட்டதாகவும் புகார் எழுந்தது.
பிரதமருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என பஞ்சாப் அரசு மீது பலரும் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு குறித்து கவலை தெரிவித்தார்.
இந்நிலையில், ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இச்சந்திப்பின்போது பிரதமரின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேட்டறிகிறார்.