1. Home
  2. தமிழ்நாடு

சரசரவென குறைந்த தக்காளி விலை..! எவ்வளவு தெரியுமா?

1

சென்னையில் சில்லறை விற்பனையில் 1  கிலோ தக்காளி  200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அத்தியாவசிய பொருளான தக்காளியின் விலை அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதற்காக பொதுமக்கள் பலரும் விலையை குறைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை கோயம்பேடு மார்க்கட்டில்  700 டன் தக்காளி  இறக்குமதி செய்யப்பட்டதால் 20 ரூபாய் வரை குறைத்து விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு தமிழகத்துக்கு வரும் தக்காளியின் வரத்து நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனையொட்டி,  விவசாயிகள்  அதிகமாக தக்காளி இறக்குமதி  செய்வதால் தக்காளியின் விலை 100 ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது. தக்காளியின் விலை 200 ரூபாயில் இருந்து  100 க்கும் கீழ் விலை இறங்கியதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று காலை 600 டன் வரை தக்காளி மொத்த வரத்து உள்ள நிலையில், அனைத்து அத்தியாவசிய காய்களும் சுமார் 6500 டன் அளவு வரை  சென்னை கோயம்பேடு சந்தையில் வந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like