1. Home
  2. தமிழ்நாடு

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 92.50 குறைந்து..!

1

பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையை பின்பற்றப்படுகிறது.

அதன்படி கடந்த ஜூலை மாதம் 19 கிலோ எடைகொண்ட சிலிண்டருக்கு 8 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதனால், சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 1,945-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அதேவேளை, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை. இதனால், சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.1,118.50 விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், இன்று ஆகஸ்ட் 1-ம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல் ரூ. 92.50 குறைந்து, ரூ.1,852.50-க்கு விற்பனையாகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படவில்லை. இதன்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,118.50 ஆக தொடர்கிறது.

Trending News

Latest News

You May Like