1. Home
  2. தமிழ்நாடு

சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

Q

மே மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை குறைந்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டுமே 2 முறை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

அந்த வகையில் நேற்று (மே 6) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் படி காலையில், கிராமுக்கு ரூ.125 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,025க்கும் சவரனுக்கு ரூ.1,000 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்று (மே 6) தங்கம் விலை மாலை நேரத்தில் கிராம் விலை ரூ.75 உயர்ந்து ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.1600 உயர்ந்து ரூ.72,800-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (மே 7) தங்கம் விலை ஏறிய வேகத்தில் சர்ரென இறங்கியுள்ளது. அதன் படி கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.9,075க்கும் சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.72,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி .111க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like