ஷாக் கொடுக்கும் தங்கம் விலை...! ஒரு சவரன் தங்கம் 66 ஆயிரமாக உயர்வு..!

தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. இந்த பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ 64,600 என கடந்த 25 ஆம் தேதி விற்பனையானது. அது போல் மிக குறைந்த விலை என பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ 61,960 -ஆக இருந்தது.
அது போல் மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. இந்த நிலையில் 4ஆம் தேதி முதல் தங்கம் விலை உயரும் என சொல்லப்பட்டது. அதன்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 70 உயர்ந்து மீண்டும் ஒரு கிராம் ரூ 8ஆயிரத்தை தாண்டி ரூ 8,010-க்கு விற்பனையாழது.
அது போல் மார்ச் 5ஆம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை குறைந்தும் கூடியும் போனது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 14 ஆம் தேதி தமிழக பட்ஜெட் என்பதால் தங்கத்தின் விலை இரு முறை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் இன்று .மார்ச் 18-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ 66,000-க்கு விற்பனையாகிறது. அது போல் கிராமுக்கு ரூ 40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 8,250-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராம் ரூ 113 -க்கும் ஒரு கிலோ ரூ 1,13,000-க்கும் விற்பனையாகிறது.