1. Home
  2. தமிழ்நாடு

கோவை மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பூண்டின் விலை..!

1

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்ஜிஆர் மொத்த மார்க்கெட்டுக்கு 100 டன்னுக்கு மேல் பூண்டு வந்தது. அது தற்போது 40 டன் ஆக குறைந்துவிட்டது.

இதன் காரணமாக பூண்டு விலை மளவளவென உயர்ந்தது. மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூபாய் 450 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை ஆர் எஸ் புரம் உழவர் சந்தையில் நேற்று கிலோ 375 வரை விற்பனையானது.இதனால் மளிகை கடையில் சில்லறை விற்பனையாக கிலோவுக்கு 540க்கு விற்பனையானது. பூண்டு விலை திடீரென்று உயர்ந்துள்ளதால் இல்லதரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகளில் 100 கிராம் பூண்டு 55 வரை விற்றது. புதுப்பூண்டு இன்னும் வரவில்லை. இது வந்தால் தான் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது 

Trending News

Latest News

You May Like