பூக்களின் விலை பன்மடங்கு உயர்வு..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் விலை அதிகரித்துள்ளதால், பிச்சி பூ ஒரு கிலோ 200 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாகவும், மல்லிகை பூ 450 ரூபாயில் இருந்து 1,200 ரூபாயாகவும், ரோஜா 70 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
மலர் சந்தையில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா வியாபாரிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மலர் சந்தையில் ஆயுதபூஜையை முன்னிட்டு, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என்பதால், திண்டுக்கல் மலர் சந்தைக்கு 40 டான் அளவில், பூக்கள் விற்பனைக்காக வந்துள்ளது.