1. Home
  2. தமிழ்நாடு

சவரனுக்கு 80 ரூபாய் குறைந்தது.. நகை பிரியர்கள் மகிழ்ச்சி!

1

தங்கம் விலை உயர சர்வதேச விலைகள் தான் முக்கியக் காரணம். சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயரும் போது, இந்தியாவில் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படும்.

இன்றைய தங்கத்தின் விலை, நேற்றைய தங்கத்தின் விலையை விட மாறுபட்டதாக இருக்கும். இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமைகளில் வர்த்தகம் எதுவும் நடப்பதில்லை என்பதால், அன்றைக்கு மட்டும் தங்கத்தின் விலை மாறாது. பணவீக்கம் அதிகமாகும் போது தங்கத்தின் விலை குறையும். பணவீக்கம் அதிகரிக்கும் போது வட்டி விகிதங்கள் உயரும் என்பது பொதுவாக பொருளாதார நடைமுறையாகும்.

Gold

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து, ரூ.6,630-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து, ரூ.53,040-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,439-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 8 ரூபாய் குறைந்து, ரூ.5,431-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 88,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு எந்த மாற்றமுமின்றி, ரூ.88,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.88.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News

Latest News

You May Like