1. Home
  2. தமிழ்நாடு

வைரலாகும் போஸ்டர்...! 'கண்டா வரச் சொல்லுங்க' ... யாரை வரவேற்க.?

1

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மாற்றி மாற்றி விமர்சனம் செய்து சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். அண்மையில் தி.மு.க.வை விமர்சித்து அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் ஒட்டிய சுவரொட்டி பேசும் பொருளாக மாறியது.

இந்த நிலையில்,நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் இடம்பெற்ற  கண்டா வரச் சொல்லுங்க  என்ற பாடல் வரியை போஸ்டரில் அச்சடித்து ஒட்டி உள்ளனர். இந்த போஸ்டரை யார் அச்சடித்து ஒட்டினர்? என்ற விபரம் ஏதும் இல்லை. தற்போது இந்த போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் வலங்கைமான், நீடாமங்கலம், ஆலங்குடி ஆகிய பகுதிகளிலும்,  கண்டா வரச் சொல்லுங்க  என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போஸ்டரில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்க கட்சிகள் தேவை என்ற வசனத்துடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும், அதில் கூட்டணிக்கு தேவையான தகுதிகளாக பின்வருமாறு கூறப்பட்டுள்ளன:-பாஜகவை எதிர்ப்பது போல நடிக்கத் தெரிந்த கட்சிகளுக்கு முன்னுரிமைகட்சியில் பத்து பேரோ ஒரே ஒருத்தரோ இருந்தால் கூட போதும்குறிப்பாக சூடு சொரணை, சுயமரியாதை இருக்கவே கூடாதுமுக்கியமாக நாங்க தான் உண்மையான அதிமுக என்பதை நம்ப வேண்டும் என குறிப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like