போஸ்ட் ஆபிஸின் அட்டகாசமான திட்டம்! மாதம் ரூ. 9 ஆயிரம் வருமானம் கிடைக்கும்..!
பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்திற்காக முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) சரியான தேர்வாக இருக்கலாம். நம்பகமான மாதாந்திர வருமான ஆதாரமாக இத்திட்டம் உள்ளது. அத்துடன் நிதி பாதுகாப்புக்கு சிறந்த திட்டமாகவும் இது உள்ளது.மாதாந்திர வருமானத் திட்டத்தில் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் அரசாங்க ஆதரவை முதலீட்டாளர் பெறலாம்.
அஞ்சல் அலுவலக (மாதாந்திர வருமானக் கணக்கு) தேசிய சேமிப்பு திட்டம் (எம்ஐஎஸ்) பங்குதாரர்களுக்கு நிலையான வட்டி விகிதம் மற்றும் மாதாந்திர வருவாயை வழங்குகிறது. அத்துடன் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் சிறு சேமிப்பு திட்டமாகவும் இது உள்ளது. இத்திட்டத்தின் கீழ் கணக்கு துவங்கும் போது தனிப்பட்ட கணக்கில் அதிகபட்சம் ரூ.9 லட்சமும் , கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சமும் முதிர்வு தொகையாக கிடைக்கும். 5 ஆண்டுகளில் இது முதிர்ச்சியடைகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை துவங்கலாம். மேலும், இதில் முன்கூட்டியே ஒரு வருடம் கழித்து கணக்கை முடிவுக்கு கொண்டு வரும் வசதி உள்ளது. ஆனால் வைப்புத் தொகையில் 2% கழிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கணக்கை மூடினால் வைப்புத் தொகையில் 1% கழிக்கப்படும்.
தபால் அலுவலக மாத வருமான திட்டத்திற்கு 7.4% வட்டி விகிதம் வழ்ங்கப்படுகிறது. இத்திட்டத்தில் ரூ.5 லட்சம் வைப்புத்தொகைக்கு மாதம் ரூ.3,083.33 வருமானமும், ரூ.9 லட்சத்துக்கு ரூ.5,550 மாத வருமானமாகவும், ரூ.15 லட்ச ரூபாய் டெபாசிட்டிற்கு மாத வருமானம் 9,250 ரூபாய் ஆகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.