1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டின் அரசியல் நேற்று இரவில் இருந்து மாறி உள்ளது" - அண்ணாமலை..!

Q

நரேந்திர மோடி அய்யாவோடு ஐயாவை அமர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்கின்ற ஆசையோடு தோட்டத்திற்கு வந்தோம். எங்களுக்கு காலை சிற்றுண்டியோடு அன்பையும் பரிமாறினார்கள்.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியினுடைய மூத்த தலைவராக இருக்கப் போகிறார். அவரின் அனுபவம் ஆளுமை திறன் உழைப்பு ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்திய அளவில் வலிமை சேர்க்கும். இப்படிப்பட்ட ஒரு தலைவர் நம் மண்ணிலிருந்து உருவாகி இருக்கின்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸிற்கு முழு மரியாதையை கொடுக்க வேண்டியது பாஜகவின் கடமை. அதனை எங்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பார்த்துக் கொள்வார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதிகள் எவை என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கூறி தலைவர்கள் புறப்பட்டனர்.

Trending News

Latest News

You May Like