அடிக்கடி வீட்டிற்கு வந்த போலீசார்.. உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்.. நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகேயுள்ள கொண்டாநகரம் கிராமத்தில் இசக்கியம்மாள் என்ற இளம்பெண் வசித்து வந்தார். இவரது மூத்த சகோதரன் மாரியப்பன்(25) மீது சுத்தமல்லி உள்ளிட்ட காவல்நிலையங்களில் கொலை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகள் தொடர்பாக சீதபற்பநல்லூர் போலீசார் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இசக்கியம்மாளுக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரன் பார்த்து வந்தனர்.
ஆனால் மாரியப்பன் மீதான வழக்குகளுக்காக போலீசார் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வதால் இசக்கியம்மாளுக்கு மாப்பிள்ளை தர மறுத்து வந்தனர். இதனால், தான் திருந்தி வாழ்வதாக சமீபத்தில் மாரியப்பன் சீதபற்பநல்லூர் காவல்நிலையத்தில் பிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளார்.
ஆனால் அதன் பின்னரும் போலீசார் விடாமல் விசாரணை என்ற பெயரில் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். இதனால் மாப்பிள்ளை இசக்கியம்மாளுக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் அவர் கடந்த 10ஆம் தேதி தற்கொலைக்கு முயன்றார்.
விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற அவரை மீட்ட குடும்பத்தினர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கா அனுமதித்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் போலீசார் தான் தனது தற்கொலைக்குக் காரணம் எனக் கூறினார்.
இதனிடையே சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை இசக்கியம்மாள் உயிரிழந்தார். ஆனால் இதற்கு போலீசார் மறுத்துள்ளனர். குடும்பப் பிரச்னை காரணமாகத்தான் தற்கொலை கொண்டதாக இசக்கியம்மாள் வாக்குமூலம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in