1. Home
  2. தமிழ்நாடு

சூடு பிடிக்கும் பா.ம.க. பிரமுகா் கொலை வழக்கு : குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு..!

1

தஞ்சாவூரை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் ராமலிங்கம் என்பவர் 2019-ஆம் ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் நபர்கள் பாப்புலா் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.இந்த ஐந்து பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை நகரின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகபை அமைப்பின் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் முகமது அலி ஜின்னா, அப்துல் மஜித், புர்ஹானுதீன், ஷாகுல் ஹமீது, நபீல் ஹசன் என்ற தஞ்சாவூரை சேர்ந்த 5 பேர் புகைபடங்களுடன், தஞ்சாவூர் ராமலிங்கம் கொலை வழக்கில் தேடப்படும் இந்த 5 பேர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு நபருக்கு தலா ரூ. 5 லட்சம் என்ற வீதத்தில், 5 பேருக்கு ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய புலனாய்வு முகமை சார்பில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. தகவலை 044 2661 5100, 9499945100, 99623 61122 என்ற செல்லிடப்பேசி எண்கள் மூலமாகவும், info-che.nia@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தகவலை தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்கள் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like