1. Home
  2. தமிழ்நாடு

பிரபல பாடகரின் பரிதாப நிலை.. 200 பாடல்களை பாடியவருக்கு இந்த நிலையா ?

1

கழுகு படத்தில் ‘ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’ பாடல், மாற்றான் படத்தில் வரும் தீயே தீயே, துப்பாக்கி படத்தில் குட்டி புலி கூட்டம் உள்பட 200க்கு மேற்பட்ட ஹிட் பாடல்களை பாடியவர் தான் சத்யன்.இவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ? யாரும் பாட கூப்பிடாததால் வேலைக்கு செல்லும் அளவிற்கு தள்ளப்பட்டிருக்கிறார்.  இதை ஒரு பேட்டியில் சத்யன் கூறி இருக்கிறார். 

பிரபல இசையமைப்பாளர்கள் எங்களைப் போன்ற பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.ஆனால் அவர்களும் ரியாலிட்டி ஷோகளில் மிகவும் பிரபலமான சிங்கர்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்து வாய்ப்புகள் கொடுத்து வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் அவர்கள் நடத்தும் கச்சேரிகளுக்கும் அந்த மாதிரி பாடகர்களை தான் அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். 

கொரோனாவுக்கு அப்புறமா வாய்ப்புகள் எதுவுமே இல்ல. இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் யாரும் பாட அழைக்காததால் ஹோட்டல்ல வேலைக்கு சென்றிருக்கிறேன். ஹோட்டல் மெயிட்டனன்ஸ் வேலைக்கு சென்று சம்பாதிக்க தொடங்கினேன். அந்த வேலையை அமெரிக்காவில் சுமார் 4 மாதம் செய்தேன். பணத்தேவை அதிகரித்ததால் வேலைக்கு சென்றேன். குறிப்பாக பின்னணி பாடகர்களுக்கு வாய்ப்பு பெரியளவில் கிடையாது. பின்னணி பாடகர்களாக இருந்த நிறைய பேர், இந்த வேலையே வேண்டாம் என கூறிவிட்டு விவசாயம் பார்க்க சென்றுவிட்டார்கள். 

நான் ஒரு சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டிருக்கின்றேன். அதில் ஒரு ரியாலிட்டி ஷோவில் மீண்டும் பிரபலமாக நான் போட்டியாளராக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டேன். ஆனால் அவர்கள் உங்களை நாங்கள் சேர்த்துக் கொண்டால் எங்களுக்கு பிரச்சனை வரும் என உதறி தள்ளி விட்டார்கள் என சத்யன் அவருடைய ஆதங்கத்தை கூறினார்.

இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே பாப்புலர் ஆனவர்களை தேடி தான் செல்கிறார்கள். வெகு சில இசையமைப்பாளர்களின் கச்சேரிகளை தான் அந்த இசையமைப்பாளர்களுக்காக மட்டும் வந்து பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் மற்றும் அனிருத். அவர்கள் கச்சேரி என்றால் அவர்களுக்காக மட்டும் மக்கள் வருகிறார்கள். ஆனால் மற்ற இசையமைப்பாளர்கள் நடத்தும் கச்சேரிகளில் பாடகர்கள் யார் வருகிறார்கள் என்பதையும் போடுகிறார்கள். அவர்களெல்லாம் யார் என்று பார்த்தால் பிரபல இசை நிகழ்ச்சி மூலம் பாப்புலர் ஆனவர்களாக இருக்கிறார்கள் என தன் ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார் சத்யன்.

Trending News

Latest News

You May Like